சாவு ஊர்வலத்தில் நாட்டு வெடி: பள்ளி முடிந்து வந்த மாணவிக்கு சோகம் Chennai school student girl Nisha
ென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். சோழிங்கநல்லூரில உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர் மூத்த மகள் நிஷாந்தினி வெட்டுவான்கேணியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து ஆட்டோவில் வீ ட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெட்டுவாங்கேணி பிரதான சாலையில் சாவு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. மது போதையில் இருந்த சிலர் பொதுமக்களைப் பற்றி கவலைப்படாமல் நாட்டு வெடிகளை திரியை பற்ற வைத்து சாலையில் வீசி சென்றனர். நாட்டு வெடிகள் டமார் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அப்படி வீசிய ஒரு நாட்டு வெடி, ஆட்டோவில் போய் விழுந்தது. சரியாக மாணவி நிஷாந்தினி முகத்தில் பட்டு வெடித்தது. இதில், நிஷாந்தினி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் கதறித் துடித்த மாணவியை ஆட்டோ டிரைவரும் அக்கம் பக்கத்தில் இருந்த மக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் அட்மிட் செய்தனர். இது குறித்து மாணவியின் தந்தை மகேஷ் குமார் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நாட்டு வெடி போட்ட கோபி வயது 47 என்பவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கோபியின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.