உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருநள்ளாறு விவசாயி குமுறும் வீடியோ வைரல் | cauvery water drained into the sea | karaikkal

திருநள்ளாறு விவசாயி குமுறும் வீடியோ வைரல் | cauvery water drained into the sea | karaikkal

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் காரைக்கால் நல்லம்பல் பகுதியில் உள்ள நூலாறு வாய்க்காலுக்கு நேற்று வந்தடைந்தது. காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், எம்எல்ஏ சிவா மற்றும் விவசாயிகள் நூலாறு ஐந்து கண் மதகு வழியாக பாசனத்துக்காக நீரை திறந்து விட்டனர். திறக்கப்படும் நீரானது குமாரக்குடி, முப்பைத்தங்குடி, சேத்தூர், கருக்கங்குடி, திருநள்ளாறு, சுரக்குடி, பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாய்க்கால் மற்றும் குளங்கள் வழியாக சென்று பாசனத்துக்கு பயன்படுவது வழக்கம். பாசனத்துக்கு காவிரி நீரை விவசாயிகள் பயன்படுத்தும் அதே வேளையில் இன்னொரு புறம் அதிகப்படியான நீர் கடலில் வீணாக கலக்கிறது. இது, காரைக்கால் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை