வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்கள் மீது அக்கறை இருக்குமானால் தயவு செய்து பதவியை ராஜினாமா செய்யுங்கள் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமா நடக்கறதுதாங்க. அவரு எதுக்கு பம்மி பதுங்கனும்.
அரசு கல்லூரியில் நாட்டு வெடி: ஸ்டாலின் பம்மி பதுங்குவது ஏன்? | Edappadi Palanisami | Admk
தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த வெங்கடேஷ்(16) முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரது அப்பா திருவிழாவுக்கு பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்கிறார். திருவிழாவுக்கு பயன்படுத்தியது போக மீதம் இருந்த நாட்டு வெடி ஒன்றை வெங்கடேஷ் வகுப்பறைக்கு நேற்று கொண்டு வந்தார். மதிய உணவு நேரத்தில் அந்த வெடியை 2 மாணவர்கள் எடுத்து விளையாடினர். அப்போது பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடி வெடித்து சிதறியது. இதில் மாதவன் (15) என்ற மாணவனின் கை சிதைந்தது. முரளி கார்த்திக் (15) என்ற மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மக்கள் மீது அக்கறை இருக்குமானால் தயவு செய்து பதவியை ராஜினாமா செய்யுங்கள் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமா நடக்கறதுதாங்க. அவரு எதுக்கு பம்மி பதுங்கனும்.