ரோடு பள்ளத்தில் பாய்ந்த பைக்: ஈரோடு அருகே அதிர்ச்சி சம்பவம் | Erode accident | Youth bike death
திருப்பூர், ஊத்துக்குளி அடுத்த ஓடைக்காடு குன்னம்பதியை சேர்ந்தவர் யோகநாதன். டிரைவர். இவரது மனைவி சுகந்தி. மகன் சுதர்சன். புதனன்று பெருந்துறை சானடோரியம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தங்கையை பார்க்க சென்றார். அங்கிருந்து இரவு 10 மணிக்கு கிணிப்பாளையத்தில் உள்ளார் மாமனார் வீட்டுக்கு பைக்கில் கிளம்பினார். அப்போது நெட்டச்செல்லாம்பாளையம் தாண்டி சென்ற போது ரோட்டில் எந்தவித தடுப்பும் வைக்கப்படாமல் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் விழுந்தார். பைக்குடன் குழிக்குள் பாய்ந்த வேகத்தில் யோகநாதன் தலையில் பலத்த அடி பட்டது. விபத்து நடந்த இடம் ஊருக்கு வெளியே இருட்டான பகுதி என்பதால் உதவ யாரும் வரவில்லை. துடி துடித்து போன லோகநாதன் அங்கேயே இறந்தார். காலை அந்த வழியாக சென்றவர்கள் குழிக்குள் பைக்குடன் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சானடோரியம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்புதூர் ஊராட்சி உட்டபட்ட பகுதியில் ஐந்து இடங்களில் சிறிய அளவிலான பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. பிரகாஷ் என்பவர் காண்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகை, பேரி கார்ட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வைக்கப்படுவதில்லை. விபத்து நடந்த பிறகு ஒரு சில இடங்களில் இருப்பு பேரல்கள் வைக்கப்பட்டு சுற்றியும் கயிறு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இருட்டில் வந்தாலும் பள்ளம் இருப்பதை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்படவில்லை. காண்ராக்ட் அலட்சியமே லேகநாதன் இறப்புக்கு காரணம். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர். ErodeTragedy #BikeAccident #YouthDeath #SuddenDemise