உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இருட்டுக்கடையை கேட்டு மிரட்டல்: மருமகன், சம்பந்தி மீது ஓனர் புகார் | iIruttu Kadai halwa | Marriage

இருட்டுக்கடையை கேட்டு மிரட்டல்: மருமகன், சம்பந்தி மீது ஓனர் புகார் | iIruttu Kadai halwa | Marriage

உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா நெல்லை மாவட்டத்தின் அடையாளமாக விளங்குகிறது. கவிதா சிங் என்பவரது குடும்பத்தினர் 4 தலைமுறையாக இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த யுவராஜ் சிங் மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நெல்லை மாவட்டம் தாழையூத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தடபுடலமாக நடந்த திருமணம் பிரச்னையில் முடிந்துள்ளது. மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கவிதா சிங் பரபரப்பு புகாரை நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகாரை அனுப்பியுள்ளார். இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு சம்பந்தி மிரட்டுவதாக பகீர் புகாரை கூறினார் கவிதா சிங். புகுந்த வீட்டில் மகள் சந்தித்த கொடுமைகளையும் அவர் விவரித்தார்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !