தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீது தோட்டா பாய்ந்தது | Gold theft | Hydrabad | Jewellery
ஐதராபாத்தின் சந்தா நகரில் பிரபல நகைக்கடை செயல்படுகிறது. காலையில் வழக்கம்போல் ஷோரூம் திறக்கப்பட்ட நிலையில், முகமூடி, தொப்பி அணிந்த 7 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களை தடுக்க முயன்ற உதவி மேலாளர் சதீஷ்குமாரை கொள்ளையர்கள் சுட்டத்தில், அவரது காலில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். ஊழியர்கள் அச்சத்தில் உறைந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை சுட்டுத்தள்ளினர். நகைகள் வைத்திருக்கும் லாக்கர் சாவியை கேட்டு ஊழியர்களை மிரட்டினர். ஆனால், அவர்கள் கைக்கு கிடைக்கவில்லை. இதனால், கண்ணாடி டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி நகைகளை அள்ளி பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்து அவசரமாக தப்பி சென்றுவிட்டனர். தகவல்அறிந்து போலீசார் வந்து ஆய்வு செய்தனர். எவ்வளவு நகைகள் பறிபோனது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. கொள்ளை சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.