சாமியார் கைதால் வங்கதேச இந்துக்கள் கொந்தளிப்பு | Hindu Leader | Krishna Das Prabhu Arrest
மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியதில் இருந்து வங்கதேசத்தில் கடந்த 4 மாதமாக இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதியளித்தாலும் கூட, அதனால் எந்த பலனும் இல்லை. பொறுத்துப் பார்த்த இந்து மத அமைப்புகள் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபட துவங்கினர். இதனால் வங்கதேச அரசு அமைதி வழியில் போராடிய இந்துக்கள் மீது பொய் வழக்கு போடத் துவங்கியது. இந்துக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்திய கிருஷ்ணதாஸ் பிரபு என்ற மத தலைவரை போலீசார் நேற்று முன்தினம் டாக்கா ஏர்போர்ட்டில் கைது செய்தனர். வங்கதேச தேசியக்கொடியை அவமதித்ததாக, அவர் மீது தேசதுரோக வழக்கை போட்டனர்.