உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பணம் இருந்தால் சிகிச்சை; இல்லாவிட்டால் மரணம் ந கதத்டச்டூ ஒச்டிடூ இடஞுணணச்டி ந கணூடிண்ணிணஞுணூண் ஆணூடிஞஞு

பணம் இருந்தால் சிகிச்சை; இல்லாவிட்டால் மரணம் ந கதத்டச்டூ ஒச்டிடூ இடஞுணணச்டி ந கணூடிண்ணிணஞுணூண் ஆணூடிஞஞு

சென்னை புழல் சிறையில் லஞ்சம் கொடுக்க முடியாத கைதிகள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இறப்பதாக கூறப்படுகிறது. சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பணம் கொடுத்தால் கிடைப்பதாக நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால், வசதி படைத்த கைதிகளுக்கு மட்டும் மருத்துவ சிகிச்சை கிடைப்பதும், ஏழை கைதிகளுக்கு மரணமே மிஞ்சுவதும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. புழல் சிறை கைதிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற பரிந்துரைக்க 50 ஆயிரமும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற 3 முதல் 5 லட்சமும் டாக்டர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. பணம் தர வசதி இல்லாத கைதிகள் நோய் முற்றி அவதிப்பட்டாலும், சிறைக்கு வெளியே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுவதில்லை. வசதி உள்ள கைதிகள் சிகிச்சை தேவைப்படவில்லை என்றாலும், லஞ்சம் கொடுத்து டாக்டர் பரிந்துரை பெற்று, மருத்துவமனையில் சகல வசதிகளுடன் தங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

அக் 19, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ