/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை அலைக்கழித்த போலீஸ் | jewellery theft in bus woman complaint
2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை அலைக்கழித்த போலீஸ் | jewellery theft in bus woman complaint
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ். லாரி டிரைவர். இவரது மனைவி சண்முகபிரியா (28) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகப்பிரியா குழந்தைகளுடன் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். ஆம்பூர் ராஜிவ் சிலை அருகில் பஸ்சில் இருந்து இறங்கி, தாய் வீட்டுக்கு சென்றார். தாய் வீட்டை அடைந்ததும் கோயில் திருவிழாவுக்கு செல்ல நகைகளை போட்டுக்கொள்வதற்காக பேக்கை திறந்து பார்த்தார். பேக்கில் இருந்த ஆரம் மற்றும் நெக்லஸ் காணாமல் போயிருந்தது. அதன் எடை ஏழரை சவரன். கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பு.
பிப் 06, 2025