உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குமரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Kanniyakumari | Crime News | Police

குமரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Kanniyakumari | Crime News | Police

வழக்கில் டபுள் கேம் ஆடிய வக்கீல் வீட்டு வர வைத்து வெறி தீர்த்த நபர் கன்னியாகுமரி திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தக்கலையை சேர்ந்த வக்கீல் கிரிஸ்டோபர் அணுகி வாதாட கேட்டார். வாதாட ஒப்புக்கொண்ட அவர் அதற்கான பணத்தை வாங்கி கொண்டார். ஆனால் வழக்கின் போக்கு இசக்கிமுத்துவுக்கு சாதகமாக செல்லவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் வக்கீல் கிரிஸ்டோபரிடம் காரணம் கேட்டார். ஆனால் அவர் முறையாக பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த இசக்கிமுத்து கிரிஸ்டோபரை ரகசியமாக கண்காணித்தார். கிரிஸ்டோபர் தனக்கு ஆதரவாக வழக்காடுவது போல் நடித்துவிட்டு தனது எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு டபுள் கேம் ஆடியதை இசக்கிமுத்து கண்டுபிடித்தார். இனி உங்க சகவாசமே வேண்டாம். வழக்கு ஆவணங்களை கொடுங்க என வக்கீலிடம் கூறியுள்ளார்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !