உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலி டிக்கெட் கொடுத்து ஏமாற்றியது யார்? மதுரையில் பரபரப்பு madurai airport fake flight ticket scam a

போலி டிக்கெட் கொடுத்து ஏமாற்றியது யார்? மதுரையில் பரபரப்பு madurai airport fake flight ticket scam a

சேலத்தை சேர்ந்தவர் ராஜா. டிராவல் ஏஜென்சி நடத்துகிறார். சேலத்தை சேர்ந்த 81 பேர், பழனியை சேர்ந்த 15 பேர் உட்பட மொத்தம் 106 பேர் காசி மற்றும் அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ராஜா ஏற்பாடு செய்தார். விமான டிக்கெட், தங்க இடம், உணவு என ஒரு நபருக்கு முப்பதாயிரம் ரூபாய் வீதம் கிட்டத்தட்ட 31.8 லட்ச ரூபாய் வசூல் செய்தார், ராஜா. சேலத்தை சேர்ந்த சிவானந்தம் என்ற புக்கிங் ஏஜென்டிடம் பணத்தை கொடுத்து 106 பேருக்கும் விமான டிக்கெட் புக் செய்ய சொன்னார். அவரும் புக் செய்து, டிக்கெட்டுகளை ராஜாவிடம் கொடுத்தர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி