உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இளம்பெண்ணிடம் அத்துமீறல்: கொந்தளிப்பில் மதுரை மக்கள் Madurai chain snatching young woman crying f

இளம்பெண்ணிடம் அத்துமீறல்: கொந்தளிப்பில் மதுரை மக்கள் Madurai chain snatching young woman crying f

சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை தினமும் கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டே போனாலும்கூட, எதாவது சாக்கு போக்கை சொல்லி போலீசார் நாட்களை கடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். மதுரையில் நேற்றிரவு நடந்த ஒரு சம்பவத்தின் சிசிடிவி வீடியோ, பெண் பிள்ளைகளை பெற்றவர்களை கடும் பீதிக்கு ஆளாக்கியுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே நாகப்பாநகர் பகுதி உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு 21 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இளம்பெண் வருவதை சில நிமிடங்களுக்கு முன்பே பார்த்து விட்ட மர்ம ஆசாமி ஒரு இடத்தில் தயாராக காத்திருந்தான். ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அப்பெண் வந்ததும் அந்த ஆசாமி அவரை கீழே தள்ளி விட்டான். கையில் வைத்திருந்த துணியால் வாயை பொத்தி, செயினை பறித்தான். அப்போது, இளம்பெண் பயத்தில் அலறியது மதுரை மாநகரையே அதிர வைத்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம ஆசாமி தப்பி ஓடி விட்டான். முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்தது வெள்ளி செயின்தான்; வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் என தெரிந்தது. வெள்ளி செயின் விலை அதிகமில்லை. ஆனாலும், தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை இந்த சம்பவம் தோலுரித்து காட்டி விட்டது. பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதும் அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படியாவது வழிப்பறி திருடனை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிக்களை போலீசார் தீவிரமாக அலசி ஆராய்கின்றனர். மதுரை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள் இப்போதுதான் வளர்ந்து வருகின்றன. சாலை வசதிகள் சரியாகஇல்லை. மின் விளக்கு வசதிகளும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடு உள்ள பகுதிகளில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஹவுஸ் ஓனர்களே சிசிடிவி பொருத்திக் கொள்கின்றனர். இளம்பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அதிர்ந்துபோயிருக்கின்றனர் இரவில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலையை இந்த சம்பவம் ஏற்படுத்தி விட்டது என மதுரை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்; ரவுடிகள்,வழிப்பறி திருடர்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டும். இந்த 2 வேலையை போலீஸ் செய்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது; அதை விட்டுட்டு, வீடியோ எப்படி சமூக வலைதளங்களில் பரவியது? என போலீஸ் தோண்டி துருவுவது நல்லாவா இருக்கு என கேட்கின்றனர், மதுரைவாசிகள்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை