/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை | operation sindoor | 16 hour debate | parliament | n
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை | operation sindoor | 16 hour debate | parliament | n
பரபரப்பான அரசியல் சூழலில் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடக்க உள்ள இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் முதல் நாள் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட தொடங்கினர். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரி, தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் பகல் 12 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி வரை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா, கடைசியில் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூலை 21, 2025