நலத்திட்ட உதவி பெற மக்கள் முண்டியடித்ததால் கடும் நெரிசல் | ADMK public meeting | puducherry
நலத்திட்ட உதவி பெற மக்கள் முண்டியடித்ததால் கடும் நெரிசல் | ADMK public meeting | Congestion in meeting | one person died | Puducherry | புதுச்சேரி அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் நடந்தது. மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் கடலூர் அன்பழகன், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசினர். பின்னர் 1000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர். அவர்கள் ஒரு சிலருக்கு வழங்கிவிட்டு மேடையை விட்டு இறங்கியதும், நலத்திட்ட உதவியை வாங்க மக்கள் முண்டியடித்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் மேடை அருகே திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வீராம்பட்டிணம், சுனாமி குடியிருப்பை சேர்ந்த 65 வயது அய்யனார் நெரிசலில் சிக்கி கொண்டார். அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.