உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ராமநாதபுரத்தில் சம்பவம்: கிராம மக்கள் அதிர்ச்சி | rameswaram | Train | shoe broken | farmer Dies

ராமநாதபுரத்தில் சம்பவம்: கிராம மக்கள் அதிர்ச்சி | rameswaram | Train | shoe broken | farmer Dies

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை 7.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 7.30 மணிக்கு ராமநாதபுரம் அருகே உள்ள எட்டிவயல் கிராமத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சத்திரக்குடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது, ஒரு பிரேக் ஷு உடைந்துள்ளது. உடைந்த பிரேக் ஷு, ரயிலில் பட்டு தெறித்து பறந்து சென்று, தண்டவாளத்தை ஒட்டிய ஒற்றையடி பாதையில் நடந்து சென்ற ஒரு நபரின் முகத்தில் வேகமாக அடித்தது. இதில் அவர் முகத்தில் பலத்த காயம் பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். இறந்தநபர் சண்முகவேலு வயது 61 என தெரிய வந்தது. வயல் வேலைக்காக சென்றபோதுதான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சண்முகவேலுவின் அலறல் சத்தம் கேட்டு மறற விவசாயிகள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சண்முகவேலு இறந்து கிடப்பது பற்றி ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடலை போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் எட்டிவயல் கிராமத்தில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.. சண்முகவேலுவுக்கு மனைவியும், மகனும் உள்ளனர். அவர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் ஆறுதல் கூறினர். சண்முகவேலுவின் எதிர்பாராத மரணத்துக்காக ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என, குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ரயிலின் பிரேக் ஷு உடைந்தது எப்படி? ரயில் பராமரிப்பு பணியின்போது பிரேக் ஷுவில் பிரச்னை இருப்பது தெரியவில்லையா? என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை