உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வழக்கை ரத்து செய்த நீதிபதி கூறியது என்ன? | Actor kanal kannan| HC | stant master

வழக்கை ரத்து செய்த நீதிபதி கூறியது என்ன? | Actor kanal kannan| HC | stant master

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மதுர வாயலில், இந்து முன்னணி சார்பில், இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண பொதுக்கூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசினார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோயிலில் லட்சம் பேர் சாமி கும்பிட்டு வருகிறார்கள். அந்த கோயிலின் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை உள்ளது. அது என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார். கனல் கண்ணின் பேச்சு வைரலாகி சர்ச்சையானது. அவர் மீது புகார் தரப்பட்டது. கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை