வாசகர்கள் கருத்துகள் ( 2 )
VAAZGA DRAVIDA MODEL.
இப்போது மக்கள் ஒருவரைக் கொல்வதற்கு பயப்படுவதில்லை, ஏனென்றால் பெரும்பாலான கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில்லை
தேனியில் கனிம வள கொள்ளை தடுக்க போராடியவருக்கு சோகம் | tamil desiya forward bloc hacked to death
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), இவர் கம்பம் நகரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் நிர்வாகியாகவும் இருந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இங்கு, கல் உடைத்து எடுக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் பெண்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சதீஷ்குமாரின் சொந்த ஊர் காமய கவுண்டன்பட்டிதான். கல்குவாரிகளில் கனிமவளத்தை அளவுக்கதிகமாக எடுத்து முறைகேடுகள் நடப்பதாக சதீஷ்குமார் குரல் கொடுக்க துவங்கினார். அளவுக்கதிகமாக எடுக்கப்படும் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தார். தனக்கு ஆதரவான ஊர் மக்களை திரட்டியும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருடன் இணைந்தும் பல கட்ட போராட்டங்கள்நடத்தினார். இதனால் சசிகுமாருக்கும் குவாரி அனுமதி பெற்ற தரப்பினருக்கும் பகை உண்டானது அதைத் தொடர்ந்து, பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என சதீஷ்குமாருக்கு தூது அனுப்பப்பட்டது. காமய கவுண்டன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் சசி தரப்பினரும், கல்குவாரி அனுமதிபெற்ற மகளிர் குழுவின் ஆதரவாளர்களும் பேச்சு வார்த்தைக்காக நேற்றிரவு திரண்டனர். அங்கு, சதீஷ்குமாருக்கும், எதிர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. சின்னசாமி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமார் கழுத்தில் சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் சரிந்தார்.
VAAZGA DRAVIDA MODEL.
இப்போது மக்கள் ஒருவரைக் கொல்வதற்கு பயப்படுவதில்லை, ஏனென்றால் பெரும்பாலான கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில்லை