உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தாசில்தார் ஆபீசில் மயங்கி விழுந்த தேர்தல் அதிகாரி |

தாசில்தார் ஆபீசில் மயங்கி விழுந்த தேர்தல் அதிகாரி |

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றுபவர் பிள்ளையார் வயது 42. இவர் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னின்று கவனித்து வந்தார். அதிக பணிச்சுமை காரணமாக கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று வழக்கம்போல அலுவலகத்துக்கு வந்த அவர் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கி கீழே விழுந்தார்.

நவ 17, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.MURALIKRISHNAN
நவ 17, 2025 21:26

எப்பவாவது வேலை பார்த்தா இப்படி ஆகும். போய் திருப்பூர்ல வேலை செய்பவர்களை கவனி. உம்மை விட மிக குறைந்த சம்பளத்திற்கு எப்படி வேலை செய்கிறான் என்று பாரும். ஒரு 500 ரூபாய் நோட்டை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இவரிடம் காட்டவும். பின்பு மயக்கமாவது ஒன்றாவது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை