/ தினமலர் டிவி 
                            
  
                            /  சம்பவம் 
                            / ரயிலில் தப்பி சென்றவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் | Tirunelveli | Crime | Police Investigation                                        
                                     ரயிலில் தப்பி சென்றவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் | Tirunelveli | Crime | Police Investigation
திருநெல்வேலி கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர். பாளை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர். இவரது மனைவி பாளைங்கோட்டை ஒன்றிய 9வது வார்டு கவுன்சிலர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
 மே 15, 2025