திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் திக் திக் சம்பவம்! | Tirupattur | DMK Panchayat Vice President
திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் கோ.புளியம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி, வயது 50. திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர். இவரது மனைவி வசந்தி வயது 40. நேற்று நள்ளிரவு இவர்கள் இருவரும் தூங்கி கொண்டு இருந்த போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். திருப்பதி மற்றும் வசந்தியை சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வசந்தி வீட்டிலேயே இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டு இருந்த திருப்பதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சீரியசாக உள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருப்பதி வீட்டிற்கு முன் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது தெரிய வந்துள்ளது.