செப்டிக் டேங்கில் சிறுமி இறந்த சம்பவம்: கைதான 2 பேர் அட்மிட் | Vikravandi | School Issue
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த சிறுமி நேற்று அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் கூறியுள்ளனர். சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருந்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார், பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியை ஏஞ்சல்ஸ் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மூவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாக, விழுப்புரம் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். ஆசிரியர் ஏஞ்சல்சை மட்டும் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் ஏஞ்சல்ஸ் அடைக்கப்பட்டார்.