மீட்பு சாதனங்கள் எதற்கு? ஆற்றில் தூக்கி போட்ட மக்கள் | villianur | sangarabarani river
villianur student drowned in sangarabarani river people argument with police fire rescue personnel for not action வில்லியனுாரை சேர்ந்தவர் ஹென்றி ஹையர் துரை. இவரது மகன் லியோ ஆதித்யன், 16; ரெட்டியார்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை நண்பன் அந்தோணியுடன் வில்லியனுார் அருகேயுள்ள செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை வேடிக்கை பார்க்க சென்றார். பிறகு இருவரும் சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். அப்போது, நீந்த முடியாமல் இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதைப் பார்த்த போலீஸ்காரர் செந்தில் நன்பர்கள் ராஜி, அய்யப்பன் ஆகியோர் தண்ணீரில் குதித்து அந்தோணியை மீட்டனர். அதற்குள் ஆதித்யனை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. அந்தோணி தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். தகவலறிந்ததும் திருக்கனூர் போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். ஆனால், மீட்புப் பணிக்கு படகு வந்து சேரவில்லை. இதனால் ஒரு மணிநேரம் கரையிலேயே தீயணைப்பு வீரர்கள் நின்றிருந்தனர். வீரர்கள் வந்து ஒரு மணிநேரமாகியும் தேடுதல் பணி துவங்காததால் மக்கள் ஆத்திரமடைந்தனர்.