செய்தி சுருக்கம் | 08 PM | 09-09-2024 | Short News Round Up | Dinamalar
சிறந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் சமக்ரா சிக் ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேசிய கல்வி கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சி தான் இது. இப்படி இருக்கும் போது மத்திய அரசால் சமகல்வி மற்றும் சமத்துவத்தை எப்படி கொடுக்க முடியும்? இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.