உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 06-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 06-06-2025 | Short News Round Up | Dinamalar

ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரம் கொண்டது. பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமான இந்த செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்தியாவின் மிகவும் சிக்கலான மற்றும் தனிமையான புவியியில் பகுதியில் கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையில் ஓர் அற்புதமாக பார்க்கப்படுகிறது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இத்தகைய சாதனை படைக்கும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான, ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பாலத்தை ஆய்வு செய்தார். அதேபோல், ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும், 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் துவங்கி வைத்தார். உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் அனைத்து கால நிலையிலும் ஜம்மு- காஷ்மீரை பொதுமக்கள் சென்றடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா முதல் ஸ்ரீநகர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் ஆன்மிக சுற்றுலா மேம்படுவது மட்டுன்றி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை