உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar

திமுக அமைச்சர் துரை முருகனின் மகனும், வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீடு, கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடங்கள் என ஆறு இடங்களில் சோதனை நடந்தது. 44 மணி நேரம் நடந்த சோதனை முடிவில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில் இருந்து 13.07 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. அதேபோல் காட்பாடியில் இருக்கக்கூடிய கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரிலிருந்து 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை