செய்தி சுருக்கம் | 01 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று இரவு முதலே ரசிகர்கள், வரத்தொடங்கி விட்டனர். கட்சி கொடி கட்டிய வாகனங்களில் தொண்டர்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் உள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்தை குற்றிலும் நூற்றுக்கணக்கான பெரிய பெரிய கட்சி கொடிகள் நடப்பட்டு உள்ளன. ரசிகர்களும் கொடி கலரில் கட்சி துண்டு, பேட்ஜ் அணிந்து வருகின்றனர். பெண்களும் கட்சி கொடி கலரில் புடவை அணிந்து கும்பல் கும்பலாக வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடமே சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கிறது. விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டு திடல் அருகிலுள்ள பிள்ளையார் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். மாலையில்தான் மாநாடு துவங்குகிறது என்றாலும், கலையிலேயே சுமார் 1 லட்சம் பேர் குவிந்தனர். 250 பார்க்கிங் இடங்கள் காலையிலேயே பெரும்பாலும் ஃபுல் ஆனது. மாநாடு திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால் கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டன. விஐபி சேர்கள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் ஆண் தொண்டர்கள் ஆக்ரமித்தனர். அவர்களை பவுன்சர்கள் அப்புறப்படுத்த முயன்றாதல் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். மாநாடுக்கு வந்தவர்கள் போதிய குடிநீர், காலை டிபன் கிடைக்காமல் அல்லாடினர். வெயிலின் தாக்கத்தால் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் உதவினர். தவெக மாநாடு நடைபெறுவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விடப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டை டோல்கேட்டில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன. தவெகவின் முதல் மாநாடு என்பதால் தலைவர் விஜய் என்ன பேற போகிறார் என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார். கட்சி கொடியை அறிமுகம் செய்தபோது, மாநாட்டில் கட்சியின் கொள்கை, திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.