உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 11-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 11-01-2025 | Short News Round Up | Dinamalar

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள லூதியானா மேற்கு தொகுதி எம்எல்ஏவாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குர்பிரீத் கோகி இருந்தார். இவர் நள்ளிரவில் சுட்டு கொல்லப்பட்டார். நள்ளிரவில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் டிஎம்சி ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கோகியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. கோகி துப்பாக்கியால் தன்னைத்தானே, தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். தலையில் குண்டு பாய்ந்து இறந்தார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் மரணத்துக்கான காரணம் தெரியவரும். விசாரணை நடக்கிறது என துணை போலீஸ் கமிஷனர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறினார். குர்பிரீத் கோகி 2022ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். லூதியானா மேற்கு சட்டசபை தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாரத் பூஷண் ஆஷுவை தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி