/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 25-09-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 25-09-2024 | Short News Round Up | Dinamalar
ஜம்மு - காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக, கடந்த 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். 2ம் கட்ட தேர்தலையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3ம் கட்டமாக, 40 தொகுதிகளுக்கு அக் 1ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக் 4ல் நடக்கவுள்ளது.
செப் 25, 2024