உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 27-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 27-09-2024 | Short News Round Up | Dinamalar

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நடந்த முறைகேடு புகாரில் முதல்வர் சிக்கியுள்ளார். இது பற்றி விசாரிக்க அனுமதி அளித்த கவர்னருக்கு எதிராக, காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி சட்டத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறினார். கர்நாடகாவில், சி.பி.ஐ., அதிகாரிகள் தாமாகவே நேரடியாக விசாரணை நடத்த அனுமதி இருந்தது. இந்த அனுமதியை திரும்ப பெறுவதற்கு, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, கோர்ட் உத்தரவு அல்லது மாநில அரசின் அனுமதி பெற்றுதான் கர்நாடகாவில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ அமைப்பை மத்திய பாஜ அரசு அரசியல் ரீதியாக பயன்படுத்தி கொள்வதால் மாநில அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. எந்த வழக்குகளிலும் சிபிஐ தாமாக விசாரணை நடத்த முடியாது. அரசிடம் முன் அனுமதி கோரினால், சம்பந்தப்பட்ட வழக்கின் உண்மை தன்மையை பரிசீலித்து, அனுமதி தருவது குறித்து முடிவெடுக்கப்படும். கவர்னர் அலுவலகத்தில் இருந்த வரும் கடிதங்களுக்கு தலைமை செயலாளர் உட்படஎந்த அதிகாரியும் நேரடியாக பதில் தர கூடாது; அமைச்சர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு பின்தான் ராஜ்பவனுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறினார்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி