உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய காலை முக்கியச் செய்திகள் | தவெக கலைப்பு | 8 AM | 28-10-2025

இன்றைய காலை முக்கியச் செய்திகள் | தவெக கலைப்பு | 8 AM | 28-10-2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நவ. 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே, பிகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ