செய்தி சுருக்கம் | 08 PM | 07-05-2025 | Short News Round Up | Dinamalar
பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் பற்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் பேசினார். பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதை கையாண்ட முறைகள் குறித்து அவர்களுக்கு தோவல் விளக்கி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் அளவானதாக, பதற்றத்தை அதிகரிக்காததாக, கட்டுப்பாட்டுடன் இருந்தது. இந்த தாக்குதல் மூலம் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை. அதே நேரம் பாகிஸ்தான் பதற்றத்தை உருவாக்க நினைத்து தாக்குதல் நடத்தினால், நிச்சயம் இந்தியா அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கும் என அஜித் தோவல் அவர்களிடம் தெரிவித்தார்.