இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பாஜ வரலாற்று வெற்றி | 8 PM | 13-12-2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் என்னும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளாவில் கடந்த 9, 11ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. எல்டிஎப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் என்னும் ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி, பாஜ தலைமையிலான என்டிஏ என மூன்று பிரதான அணிகள் போட்டியிட்டன. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜவின் என்டிஏ கூட்டணி தட்டி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன. மெஜாரிட்டி பெற 51 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். கம்யூனிஸ்ட் கூட்டணியின் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 80 இடங்களில் களம் இறங்கியது. அந்த கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் 17, ஆர்ஜேடி 3, ஜேடிஎஸ் 2 வார்டுகளில் போட்டியிட்டது. மற்ற வார்டுகளில் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. இதே போல் யுடிஎப் கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 88 இடங்கள், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4 வார்டில் களம் இறங்கின. என்டிஏ கூட்டணியில் பாஜ 96 வார்டில் போட்டியிட்டது. மற்ற 5 இடங்கள் அதன் கூட்டணி கட்சிகள் நின்றன. ஓட்டுப்பதிவு முடிந்து இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. காலை முதலே பாஜ முன்னிலை வகித்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் பாஜ கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்று அசத்தியது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 29 வார்டுகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 19 வார்டுகளும் கிடைத்தன. 2 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஒரு வார்டில் ஓட்டுப்பதிவுக்கு முன்பு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இறந்து விட்டார். இதனால் அங்கு தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடந்த 100 வார்டுகளில் பாதிக்கு பாதியை பாஜவின் என்டிஏ கூட்டணி வென்று விட்டது. 2 இடங்களில் வென்ற சுயேச்சை வேட்பாளர்கள் உதவியுடன் பாஜ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றுகிறது. இதுவரை கம்யூனிஸ்ட் கட்சி வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி இப்போது பாஜ கைக்கு வந்திருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கூட்டணி 52 இடங்களை வென்று இருந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 10 இடம் கிடைத்திருந்தது. பாஜ 33 வார்டுகளை கைப்பற்றி இருந்தது. இப்போது வெற்றி பெற்று இருப்பதன் மூலம் கேரள தலைநகரில் பாஜவை சேர்ந்தவர் மேயராக அரியணை ஏற இருக்கிறார். இதனால் கேரள பாஜவினர் உற்சாகத்தில் உள்ளனர். #BJPWonInKerala #NDAWonThiruvananthapuram #KeralaLocalBodyElection #BJPvsLDF #KeralaPolitics #Election2023 #LocalBodyPolls #NDAInKerala #BJPVictory #ThiruvananthapuramElections #PoliticalShowdown #KeralaElections #BJPLeadership