தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 OCT 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார். இந்த பயணம் குறித்து மோடி வெளியிட்ட அறிக்கையில், புதின் அழைப்பை ஏற்று 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டு செல்கிறேன். பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. இந்த பயணம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என கூறியுள்ளார். வைகோ பேரணியாக சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி அறிவாலயத்தை காப்பாற்றி திமுகவை கருணாநிதியிடம் ஒப்படைத்தது அம்மா அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார். சென்னை திருக்கழுக்குன்றம் அருகே பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து 4 சவரன் நகை மற்றும் 400 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடுகுடுப்புகாரன் வேடத்தில் வந்து கைவரிசை காட்டிய நபரை போலீசார் தேடுகின்றனர். சென்னை