இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு காரணங்கள் அடுக்கிய பழனிசாமி Edapadi Palanisamy | Erode East Bye Electi
இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு காரணங்கள் அடுக்கிய பழனிசாமி Edapadi Palanisamy | Erode East Bye Election| Admk | Boy cott| ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பழனிசாமி அதற்கான காரணங்களை பட்டியலிட்டு உள்ளார். கருணாநிதி காலம் தொட்டு திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், திமுகவினரால் நடத்தப்பட்ட வன்முறை மற்றும் அராஜக சம்பவங்கள் எண்ணில் அடங்காதவை. திமுக என்றாலே அராஜகம், வன்முறை என மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆட்சி நடக்கிறது. கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பணம், மது, கொலுசு, குக்கர், தங்ககாசு முதலான பரிசுப் பொருட்கள் வாரி இறைக்கப்பட்டன. அதை தாண்டி திமுகவின் மிரட்டல்கள் அப்பாவி மக்களை அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியலில் அடைத்த அவலமும் நடந்தது. திமுகவினர் அழைக்கும் இடத்துக்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்திருக்கவில்லை என்றால் முதியோர் உதவித் தொகை வழங்க மாட்டோம், மற்ற அரசு நலத் திட்டங்கள் வழங்கப்படாது என்ற மிரட்டல்களுக்கு பயந்து மக்கள் சொந்த மண்ணில் அகதிகள் போல நடத்தப்பட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அமைச்சர்களும் திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். பணபலம், படை பலத்துடன் அராஜகங்களை மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்காது என்பதால் வரும் பிப்ரவரி 5ல் நடக்கும் இடை தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.