செய்தி சுருக்கம் | 08 PM | 31-01-2025 | Short News Round Up | Dinamalar
ஆய்வறிக்கை தாக்கல் செய்த நிர்மலா! பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த ஓராண்டில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். ஜனாதிபதி உரை முடிந்ததும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும். சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நிதியாண்டின் முதல் பாதியில் உணவு பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என அறிக்கையில் குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கைக்கு லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நாள் முழுதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.