உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 20-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 20-05-2025 | Short News Round Up | Dinamalar

மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது., திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையங்குளம் கிராமத்திலும் கன மழை பெய்ததால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த அம்மா பிள்ளை வயது 65 வெங்கட்டி அம்மாள் வயது 55 ஆகியோர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அம்மா பிள்ளையுடன் 10 வயதான அவரது பேரன் வீரமணியும் இருந்தான். அப்போது, மழையில் ஊறிப்போயிருந்த வீட்டின் முன்புற கூரை திடீரென இடிந்து மூவர் மீதும் விழுந்தது. அம்மா பிள்ளை, பேரன் வீரமணி, வெங்கட்டி அம்மாள் மூவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து மூவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் இறந்தனர்.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை