உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 22-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 22-05-2025 | Short News Round Up | Dinamalar

சினிமா தயாரிப்பாளரும், டான் பிக்சர்ஸ் உரிமையாளருமான ஆகாஷ் பாஸ்கரனும் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் பாஸ்கரன். கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ஆகாஷ் பாஸ்கரனின் தந்தை சேலத்தில் PRR ஸ்வர்ண மாளிகை என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இதுதவிர்த்து வேலவன் டிரான்ஸ்போர்ட் என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ