/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் 4 மணி | 09-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் 4 மணி | 09-12-2024 | District News | Dinamalar
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள வேங்கைபட்டி புதுக்கண்மாய்க்கு பாலாற்றில் இருந்து கால்வாய் வழியாக விவசாயிகள் தண்ணீர் கொண்டு சேர்த்தனர். புதுக்கண்மாய் முழுக்கொள்ளளவை எட்டி தண்ணீர் மறுகால் பாய்ந்து வெளியேறியது. தொடர்ந்து நடுமடையில் கரை உடைந்து தண்ணீர் விளை நிலங்களுக்குள் பாய்ந்தது. இதனால் 150 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
டிச 09, 2024