/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 31-12-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 31-12-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேகா பிரியா, ஐய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவையும் சென்னை ஐகோர்ட் அமைத்துள்ளது. இந்த குழுவினரும் விசாரணையை துவக்கி உள்ளனர். கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து, மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ளனர். கைதான ஞானசேகரன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவி பாலியல் வன்முறை தொடர்பான எப்ஐஆர் எனும் முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்த 14 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர்.
டிச 31, 2024