உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 18-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 18-01-2025 | Short News Round Up | Dinamalar

திமுக சட்டத்துறையின் 3வது ஒரு நாள் மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் துவங்கியது. மாநாட்டை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்கி வைத்தார். காலை 10 மணிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நடந்தது. மூத்த வக்கீல் கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் பங்கேற்று பேசினர். துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது திமுக சட்டத்துறை என்றார். மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை