செய்தி சுருக்கம் | 08 PM | 02-07-2025 | Short News Round Up | Dinamalar
சோசியல் மீடியா பதிவுக்காக, தமிழக பாஜவை சேர்ந்த பிரவீன் ராஜை கைது செய்திருப்பதை அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டித்துள்ளார். போதை பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தனியாக வசிக்கும் முதியோர் கொலை என தமிழகத்தில் பெருகி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆயிரம் இருக்கிறது. ஆனால் திமுக அரசின் நிர்வாக தோல்விகள், சோசியல் மீடியாக்களில் பேசுபொருளாகி விடக்கூடாது என்பதற்காக, முழுநேரமாக அதை கண்காணிக்க மட்டுமே போலீசை பயன்படுத்துவது முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் என அனைவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவினர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆனால் சாதாரண சோசியல் மீடியா பதிவுகளுக்காக, பாஜவினரை கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.