உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 26-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 26-09-2024 | Short News Round Up | Dinamalar

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் திமுக அரசில் அமைச்சராக இருந்த செந்திலை கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வர செந்தில் பாலாஜி தொடர்ந்து முயற்சி செய்தார். விசாரணை கோர்ட்டில் 3 முறை, ஐகோர்ட்டில் 2 முறை, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முறை ஜாமின் கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அடுத்தடுத்து 58 முறை செந்திலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. மீண்டும் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து வந்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, செந்திலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி ஓகா, தீர்ப்பை அறிவிக்கும் போது, அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்தார். ஜாமினும் கொடுக்க முடியாது.. விசாரணையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது. இரண்டுக்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது. ஒருவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கிறீர்கள்.. அதை எதிர்க்கிறீர்கள்.. அதே சமயம் விசாரணையையும் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதை எல்லாம் கருத்திக்கொண்டு.. நாங்கள் நஜீப் வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்.. ஜாமீன் வழங்கி உள்ளோம் என்றார். ஜாமின் கொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது, செந்தில் பாலாஜிக்கு இரண்டு பேர் 25 லட்சம் ரூபாய்க்கு ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சி எடுக்கக் கூடாது. குற்றவியல் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, ஜாமின் கிடைத்ததால் வெளியே வருகிறார். அவர் மீண்டும் அமைச்சராக சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என செந்திலின் வக்கீல் இளங்கோ தெரிவித்துள்ளார்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை