ஏழாவது நிப்ட் -டீ போட்டியில் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு|Nift tea premier cricket league|Tirupur
ப்ட் -டீ மற்றும் டெக்னோ ஸ்போர்ட் சார்பில் நடைபெறும் அப்துல் கலாம் சுழற் கோப்பைக்கான ஏழாவது நிப்ட் -டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. நிப்ட் -டீ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போட்டியில் Eastmen export, தங்கம்மன் fashions, பின்னலாடை நிறுவன அணி உள்ளிட்ட பல அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். லீக் போட்டிகள் 15 ஓவரில் நடத்தப்படுகிறது. முதல் போட்டியில் ஈஸ்ட்மென் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் எஸ்.என் எக்ஸ்போர்ட்ஸ் அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் டெக்னோ ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. நான்காவதாக நடந்த போட்டியில் சுலோச்சனா காட்டன் மில்ஸ் அணியினர் 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். தொடர்ந்து நடக்கும் போட்டிகளை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.