உள்ளூர் செய்திகள்

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தைக்கு இணையாக பிரபலமானது மாணிக்கம் போன்று பூ மாலை தயாரிக்கும் தெக்கூர் 'முத்தும்பெருமாள்' குடும்பம். இப்பரம்பரை தயாரிக்கும் இம்மாணிக்க மாலையே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உற்சவரை தினமும் அலங்கரிக்கிறது. 'நாலு தலைமுறையா மாணிக்க மாலை கோர்க்கு றாங்கங்கிற புகழ் கிடைச்சிருச்சு. இப்போ, மனைவியும் மகளும் அந்த புகழை காப்பாத்திட்டு வர்றாங்க' எனச் சொல்லும் 73 வயது முத்தும்பெருமாள் தயாரிக்கும் மாணிக்க மாலை கடந்த ஏப்ரல் மாதம் 'புவிசார் குறியீடு' பெற்றது. மாணிக்கமாலை தந்த புகைப்பட பொக்கிஷங்களை அள்ளிவந்து தன் ஞாபகங்களை மீட்டத் துவங்கினார் முத்தும்பெரு மாள். பொக்கிஷம் 1: இவரது மகள் வனிதாஸ்ரீ மாணிக்க மாலை கோர்த்தபடி இருக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அதைப்பற்றி நம் பிரதமர் மோடி விவரிக்கிறார்! 'சீன அதிபர் 2019ல் மாமல்ல புரம் வந்தப்போ, 'மாணிக்க மாலையை காட்சிப்படுத்தணும்'னு எனக்கு அழைப்பு. அப்போ எனக்கு உடம்பு சரியில்லாததால, என் மூணாவது மகளை அனுப்பி வைச்சேன்! 'ஊர் திரும்பினதும் தலைவர்களை பக்கத்துல பார்த்த பரவசத்தை என் மகள் என்கிட்டே விவரிச் ச விதம்... அந்த இடத்துல நானே இருந்த உணர்வை தந்திருச்சு. மறுநாள், பத்திரிகையில இந்த புகைப்படம் பார்த்ததும் என் மாணிக்க மாலை உலகம் முழுக்க சேர்ந்துடுச்சுன்னு பெரிய சந்தோஷம்!' பொக்கிஷம் 2: டிசம்பர் 26, 1993ம் தேதியிட்ட பத்திரிகை அட்டைப்படத்தில் இவரது மனைவி தமிழரசி! 'அப்போ, பத்திரிகையோட அட்டைப்படத்துல வர் றதெல்லாம் சா தாரண விஷயம் இல்லை. வாழ்க்கையில என்னை இவ்வளவு உயரத்துக்கு கூட்டிட்டு வந்த என் மனைவி தமிழரசிக்கு கிடைச்ச சிறந்த அங்கீகாரம் இது! 'தன் மரணத்துக்கு முன்னாடி என் மனைவியை அழைச்சு, 'மாணிக்கமாலை எங்களோட அழிஞ்சிடாம பார்த்துக்கம்மா'ன்னு என் அப்பா கேட்டுக்கிட்டதை, 'பூம்புகார், கலைச்செம்மல்' விருதுகள் வாங்கி என் மனைவி நிறைவேத்திட்டாங்க!' பொக்கிஷம் 3: 2003ம் ஆண்டு ஐதராபாத்தில் 'ப்ளோரா' விருது பெற்று இவர் ஊர் திரும்பியதும் நிகழ்ந்த பாராட்டு விழா! 'ஆசிய அளவுல 50 கைவினை கலைஞர்கள் பங்கேற்ற 13வது உலக பூக்கள் கண்காட்சி; தோவாளை பூக்களால 24 மணி நேரத்துல நான் கோர்த்த பாய் வடிவ மாணிக்க மாலையை எல்லாரும் அப்படி பாராட்டி னாங்க! முதல் இரண்டு பரிசு களும் எனக்கே கிடைச்சது! 'அப்பா மாடசாமி பண்டாரம், 1988ல் 'தேசிய விருது' வாங்கினப்போ உணர்ந்த சந்தோஷத்தை அன்னைக்கும் உணர்ந்தேன்!' ஞாபகங்களில் இப்படி சிலிர்த்த முத்தும்பெருமாள், இறுதியாய் நம்மிடம் சொன்னது... 'இந்த கலை நிச்சயம் என் தலைமுறையோடு அழியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !