உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: இட்லி கடை (தமிழ்)

மூச்சுத் திணற வைக்கும் அடுத்த சம்பவம்! எப்படி இட்லி அவிக்கணும்னு ஆவியா வந்து ராஜ்கிரண் தனுஷுக்கு சொல்லிக் கொடுக்குற வரைக்கும், தனுஷ் ஒருமாதிரி இட்லி அவிக் க , அதை ஒரு ஆள்... ஒரே ஆள ் , நாள் தவறாம வந்து முழுங்க முடியாம முழுங்க... நல்லவேளை... 'இட்லி நல்லாயிருக்கு... போதும்யா'ன்னு இடைவே ளைக்கு கொஞ்சம் முன்னாடியே அந்தாளு அழுதுட்டான்; இல்ல... தனுேஷாட இட்லி கொப்பரையில நாம வெந் திருப்போம்! வெளிநாட்டுல இருந்து ஸ்டைலா வர்ற அருண் விஜயை, தனுஷ் அடி வெளுக்குறது இடைவேளை. ' சிங்கிள் வாடிக்கையாளர் தினமும் வந்து இரண்டு இட்லி சாப்பிட்டுப் போற அந்த கடையை உடைச்சிட்டா தனுைஷ ஜெயிச்சிரலாம்'னு அருண் விஜய் நினைக்கிறது மீதி திரைக்கதை! இந்த கூத்துக்கு நடுவுல, நித்யா மேனன் தனுஷுக்கு ஒத்தாசையா ஆட்டுக்கல்லுல மாவு அரைக்குறாங்க. மாவு நல்ல பதமா பொங்கி வருது. அதை கையில அள்ளி அவங்க காமிக்கிற... ம்ஹும்... படத்தைக் காட்டிலும் விமர்சனம் பயங்கரமா பல்லிளிக்குது; ம்ம்ம்... எந்த பக்கம் திருப்பலாம்... ஆங்... 'முட்டாப்பய' மகனை கூட்டிக்கிட்டு ஸ்கூல் பஞ்சாயத்துக்கு அலையுற டாடி மாதிரி இதுல சத்யராஜ்; மகன் அருண் விஜயை தனுஷ்கிட்டே அவர் 'ஸாரி...' சொல்லச் சொல்ற காட்சியெல்லாம்... ங்ங்கொய்யால... பால்வாடி பஞ்சாயத்தெல்லாம் பிச்சை எடுக்கணும்! 'ஆஸ்கர்' விருதுக்கான இந்த காட்சிகள்ல, அருண் விஜய்க்கு புதுப்புது சொக்காவை மாட்டிவிட்டு ஸ்டைலா நிற்கச் சொல்லி இருக்காப்ல டைரக்டர் தனுஷ்; பாவம்யா அந்த மனுஷன்! இவரைக் காட்டிலும் அய்யோ பாவம்... ராஜ்கிரண்; கடைவாயோட கடைமடைப் பகுதியில இருந்து ஒரு சிரிப்பு, இரண்டு தட்டு இட்லி அவிப்பு; அப்புறம்... ஆள் க்ளோஸ்; யெஸ்... யெஸ்... அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை! போதும் தனுஷ்... மூச்சுத் திணறுது; முடியலை. ஆக....'இன்பன் உதயநிதி வழங்கும் இந்த இட்லி கடை சிறப்பாக இருக்கிறது!' - இப்படிக்கு வதந்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !