உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / கோடையில் ஒரு கூல் சந்திப்பு

கோடையில் ஒரு கூல் சந்திப்பு

கோடை விடுமுறையில், செல்லங்களை எங்கே அழைத்து செல்வது என தேடுவோருக்காகவே, 'பல்டு ஜன்வார்' பெட் கார்னிவல், மே 3, 4ம் தேதி, கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள லுாலுா மாலில் நடக்கிறது.செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி, டாக் ஷோ, இலவச மருத்துவ முகாம், தத்தெடுப்பு முகாம், தடுப்பூசி முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள், இந்த பெட் கார்னிவலில் இடம்பெறுகின்றன. உங்கள் செல்லத்தை அழகுப்படுத்தி அழைத்து சென்று, அதன் தனித்திறமைகளை வெளிகாட்ட செய்யலாம். இங்கு, அங்கீகாரம் பெற்ற ப்ரீடர்கள் பங்கேற்பதால், செல்லப்பிராணி வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். எக்ஸாடிக் பெட் வளர்ப்பவர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, luluindia.inஎன்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ