உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / குட்டிமா... முட்டுமா பிறந்த நாள் கிப்ட்

குட்டிமா... முட்டுமா பிறந்த நாள் கிப்ட்

''விளையாட்டு பொருட்களில் கூட, விலங்குகளின் உருவங்கள் வேண்டுமென அடம்பிடித்ததால், பேரனின் முதல் பிறந்த நாளன்று, ஒரு ஜோடி புங்கனுார் குட்டை மாடு வாங்கி பரிசளித்தோம்,'' என்கிறார் கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி.'நியூமென்ஸ்' நிறுவன உரிமையாளரான இவர், தன் பேரன் ஷ்கந்தா பிரசன்னாவின் செல்லப்பிராணிகள் குறித்து பகிர்ந்தவை:வீட்டில் ஒரு அறை முழுக்க விளையாட்டு பொருட்கள் இருந்தாலும் ஆடு, மாடு, கோழி, பறவை பொம்மைகளை தேடி எடுத்து விளையாடி கொண்டிருப்பான். விலங்கு பொம்மைகளுடனே எந்நேரமும் இருந்ததால் முதல் பிறந்தநாளன்று ஆந்திராவில் உள்ள ராஜ்முந்திர்ல இருந்து, குட்டை மாடு வாங்கி பரிசளித்தோம். இதை பார்த்தபோது, அவனது கண்கள் விரிந்து முகம் சிவந்த அந்த நொடி, இப்போதும் பொக்கிஷமாக நினைவில் இருக்கிறது.அதற்கு 'குட்டிமா', 'முட்டுமா' என பெயர் வைத்துள்ளான். இதை பார்க்கவே தினமும் தோட்டத்திற்கு செல்வான். பச்சை புல் கொடுத்துவிட்டு, அது சாப்பிடும் வரை பக்கத்திலேயே நின்று பார்ப்பான். இவனது ஆர்வத்தை பார்த்து, நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியன் ப்ரீடான குட்டை ஆடு வாங்கி தந்தார். இதோடு வாத்து, கோழியும் இவனது பெட்ஸ் பட்டியலில் சேர்ந்துள்ளது.குட்டிமாவும், முட்டுமாவும் இவனை பார்த்தாலே, குரல் கொடுக்க தொடங்கிவிடுகின்றன. இவன் பேசுவதை, அவை புரிந்து கொள்கின்றன. இந்த வயதிலே, விலங்குகளுடன் இவன் செய்யும் சேட்டைக்கு அளவில்லை. குழந்தைகளின் குறும்புத்தனத்தை, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் புரிந்து கொள்வது தான், ஆச்சர்யமாக இருக்கிறது.

இதன் சிறப்பம்சம் பற்றி...

ஆந்திரா மாநிலம், புங்கனுாரில் இந்த நாட்டு ரக குட்டை மாடுகள் அதிகம் வளர்க்கின்றனர். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஒருநாளைக்கு, 3 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். பசுந்தீவனம் கொடுத்தால் போதும். மற்றபடி பராமரிப்புக்கு பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை. குட்டிமா, முட்டுமாவுக்கு, ஒரு வயது ஆன போது வாங்கினோம். இன்னும் சினை பிடிக்கலை. குழந்தைகளிடம் எளிதில் நெருங்கி பழகுவதால், தோட்டம் வைத்திருப்போர், குட்டை மாடுகள் வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை