உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி

கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி

ப ப்பிகளின் தனித்திறனுக்கு மேடை அமைத்து தரும் வகையில், கொடைக்கானலில், வரும் 30, 31ம் தேதிகளில், கண்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு இன பப்பியின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தி, உரிய தேவைக்கு பயன்படுத்தி கொள்ள, அதன் திறமைக்கு மகுடம் சூட்ட, நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. கொடைக்கானல் கென்னல் அசோசியேசன் சார்பில், 11, 12வது சாம்பியன்ஷிப் டாக் ஷோ மற்றும் மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில், 146, 147 வது சாம்பியன்ஷிப் டாக் ஷோ, கொடைக்கானல் மூஞ்சிக்கலில் உள்ள, கொடைக்கானல் பப்ளிக் பள்ளிமைதானத்தில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியா, தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆறு நடுவர்கள், பப்பியின் தனித்திறனுக்கு மதிப்பிடுகின்றனர். இதில், உங்கள் பப்பியுடனோ அல்லது பார்வையாளராகவும் பங்கேற்கலாம். கூடுதல் தகவலுக்கு, c.v.gmail.comஎன்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை