உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தன்னலமற்ற அன்பு! தேனி கலெக்டர் உருக்கம்

தன்னலமற்ற அன்பு! தேனி கலெக்டர் உருக்கம்

தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரியில், விலங்கின மரபியல் இனவிருத்தி துறை சார்பில், மண்டல அளவிலான கோம்பை நாய் மரபியல் வளப்பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய்கள் கண்காட்சி, செல்லப்பிராணிகள் நல முகாம் சமீபத்தில் நடந்தது. தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் கருத்தரங்கை துவக்கி வைத்து, மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் உள்ள 'வெற்றி' (போதைப்பொருட்கள் துப்பறியும் பிரிவு), லக்கி, பைரவ் (குற்றப்பிரிவு), வீரா (வெடிகுண்டு தடுப்பு செயலிழப்புப் பிரிவு) ஆகிய நான்கு நாய்களை பரிவுடன் தொட்டு படைப்பிரிவு போலீசாரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.முன்னதாக அவர் கூறுகையில், ''என்னிடம் இரண்டு நாய்கள் உள்ளன. அதற்கும் எனக்குமான பந்தம் அளப்பரியது. நாய்கள் நம்மை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும். சில நேரங்களில் நாம் அவற்றிடம் இருந்து அன்பை எதிர்ப்பார்ப்போம். ஆனால் அவை எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. கோம்பை நாய் இனத்தை காப்பாற்றுவது நம் கடமை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை