உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / விலங்குகளில் வினோதம்

விலங்குகளில் வினோதம்

பிக்மி மர்மோசெட் (pygmy marmoset)

இது, உலகின் மிகச்சிறிய குரங்கு இனம். இதன் எடை வெறும் 100 கிராம் மட்டுமே. இது தன் தலையை 180 டிகிரி வரை சுழற்றும். மரக்கிளைகளில் சிறிய பொந்து உருவாக்கி ஒளிந்து கொள்வதால், எளிதில் எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும். பொதுவாக பெண் குரங்குகளே தன் குட்டிகளை சுமக்கும் நிலையில், சிம்பன்சி, ரீசஸ் மக்காக் குரங்கு, பிக்மி மர்மோசெட் போன்ற இனங்களில் மட்டும், ஆண் குரங்கு தன் குட்டியை சுமக்கின்றன.

தரை நாய் (Prairie dog)

இது குரைக்காது, வால் ஆட்டாது. ஆனால், தரை நாய் என அழைக்க காரணம், அவைஎழுப்பும் சத்தம் தான். நாயை போலவே சத்தமிடுவதால், இப்பெயர் வைக்கப்பட்டது. இது, வட அமெரிக்கா, கனடா, மெக்சிகோ பகுதியில், பிரெய்ரி என்ற ஒரு வகையான புற்கள் அதிகம் கொண்ட பகுதியில் வாழும் ஒரு வகை எலி. இது, தரைக்கு அடியில், பெரிய பரப்பளவில் வீடு கட்டும். அதில்,உறங்குவதற்கு, உணவு சேமிக்க, குட்டிகளை பாதுகாக்க, காற்றோட்டம், வெளிச்சம் உள்ளே வரும் வகையில், பிரத்யேகமாக அறைகளை கொண்டிருக்கும்.

வாத்து (Duck)

இது ஒரு நீர்வாழ் கோழியினம். நீரிலும், நிலத்திலும் வாழ்வதற்கு ஏற்ப, இதன் கால்களில், சவ்வுகளில் ஆன வலைப்பாதம் உள்ளது. இதன் காலில் நரம்புகளோ, ரத்தநாளங்களோ இல்லாததால் தான், இவற்றால் குளிர்ந்த நீரிலும் நீந்த முடிகிறது. இதன் வால் பகுதியில், 'யூரோபீஜியல்' (uropygial gland) சுரப்பி உள்ளது. இதிலிருந்து வெளியேறும் எண்ணெய் போன்ற திரவத்தை, வாத்து தன் அலகால், உடல் முழுக்க உள்ள சிறகுகளில் பரவ செய்வதால், அது நீருக்குள்ளே இருந்தாலும், அதன் உடலில் தண்ணீர் ஒட்டுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை